Sunday, November 27, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 25


எங்கள் தங்கம்  - 29

படம் வெளியான நாள் 9-10-1970

கலைஞர் முதல்வராக இருந்த சமயம்.

மேகலா பிக்சர்ஸ் சார்பில் வந்த படம்.கதை, வசனம், தயாரிப்பு முரசொலி மாறன்.இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.

டைடிலில், கலைஞரின்"எங்கள் தங்கம்" என்று வரும்.அந்த அளவே கலைஞருக்கும், இப்படத்திற்கும் தொடர்பு

தங்கம் ஒரு லாரிடிரைவர்.அவரது சகோதரி சுமதி.கண் பார்வை இல்லாதவர்.மூர்த்தி சுமதியின் கணவர்.மூர்த்தி, ஒரு சமூக விரோத கும்பலிடம் சிக்குகிறார்.அதற்கான காரணம், இரும்பு பெட்டகத்தை உடைக்கும் திறமை வாய்ந்தவர் அவர் என்பதால்.

தங்கம், எப்படியாவது, மூர்த்தியை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்.அவருக்கு உதவியாக கலாதேவி இருக்கிறார்.

தங்கமாக...தங்கம் எம் ஜி ஆர்., மூர்த்தியாக ஏ விஎம் ராஜன், சுமதியாக புஷ்பலதா, கலாதேவியாக ஜெயலலிதா நடித்தனர்

இப்படத்தில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பியதை நகைச்சுவையாக சொல்வதுபோல எம் ஜி ஆர் கதாகாலட்சேபம் செய்வது ரசிக்கத்தக்கது

தவிர்த்து, எம் எஸ் விஸ்வநாதன் இசையில், நான் அளவோடு ரசிப்பவன் (சௌந்தரராஜன் ,சுசீலா), தங்கப்பதக்கத்தின் மேலே (டி எம் எஸ்., சௌந்தரராஜன்) பாடல்கள் ஹிட்.கதாகாலட்சேபம் டி எம் எஸ் குரல்.

பட ஆரம்பத்தில், சிறு சேமிப்புப் பற்றி ஒரு கூட்டம் நடைபெறும்.அதில் எம் ஜி ஆர்., எம் ஜியாராகாவே கலந்துகொண்டு, சிறு சேமிப்பு குறித்து பேசுவார்.

படம் வெற்றி படமாக அமைந்தது. 

No comments:

Post a Comment