மறக்கமுடியுமா - 25
கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த படம் மறக்க முடியுமா?
இப்படத்தின், திரைக்கதை, வசனம் கலைஞருடையது.படத்தயாரிப்பாளர், இயக்கம், முரசொலி மாறன் ஆவார்
அரும்பு முதல் கருகிய மலராகும் வரை அல்லல்பட்டு அழிகின்ற பென் ஒருத்தியின் கண்ணீரால் தீட்டப்பட்டதே இந்த சித்திரம்என்றார் கலைஞர்
ஒரு சகோதரி, இரு சகோதரர்கள் சிறு வயதிலேயே அனாதை ஆகின்றனர்
விதி வசத்தால் அவர்கள் பிரிய நேரிடுகிறது.அந்தப் பெண் வளர்கிறாள்.அவள் வாழ்வில், அடி மேல் அடி.
ஒரு கட்டத்தில், வேறு ஒரு வீட்டில் வசிக்கும் அவளது சகோதரன் குடிபோதையில், அவள் தன் சகோதரி எனத் தெரியாமல் அணுகுகிறான்.
அவளுக்கோ அவன் சகோதரன் எனத் தெரியும்..அதைஉ அவனுக்கு அவள் எப்படி புரிய வைக்கிறாள்?
இது போன்ற பல உணர்ச்சிகரமான காட்சிகளூம், வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.
டி கே ராமமூர்த்தி இசையில், கலைஞர் எழுதி பி சுசீலா பாடியிருந்த "காகித ஓடம்..கடல் அலைமேலே போவது போல மூவரும் போவோம்' என்ற பாடல் இன்றும் காதுகளில் தேனாக ஒலிக்கிறது
தவிர்த்து, ஜேசுதாஸ், சுசீலா பாடிய , சுரதா எழுதிய "வசந்த காலம் வருமோ" பாடலும் சிறப்பு
உபரி தகவல்_
படத்திற்கு முக்கியப் பாடல் தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.மாயவநாதன் எழுதியது இசையமைப்பாளர் ராமமூர்த்திக்கு திருப்தியை அளிக்கவில்லை."இங்களுக்கு எப்படித்தான் வேண்டும்?" என மாயவ நாதன் கேட்க, கோபத்தில் இருந்த ராமமூர்த்தி.."மாயவநாதா...மாயவநாதா...மாயவநாதா.. என்று எழுது" என்றாராம்
இதனால் மாயவநாதன் கோபித்துக் கொண்டு போய்விட, விஷயம் அறிந்த கலைஞர் அதேபோல தானே ஒரு பாடலை எழுதினாராம் அந்த பாடலே "காகித ஓடம் பாடல்"
(மூலக்கதை தெலுங்கு.ஏற்கனவே சந்தானம் என்ற பெயரில் மொழிமாற்று படமாய் வெளிவந்தது)
No comments:
Post a Comment