Thursday, November 3, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 18 பூம்புகார்



பூம்புகார் - 23

1964ல் வந்த படம் பூம்புகார்

மேகலா பிக்சர்ஸ் சார்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில், கலைஞர் திரைக்கதை, வசனத்தில் வந்த படம் பூம்புகார்

ஏற்கனவே பி யூ சின்னப்பா, கண்ணாம்பா நடித்து கண்ணகி படம் வெளிவந்திருந்தாலும், கலைஞர்..தன் எண்ணத்திற்கேற்ப கதையில் சில புதுமைகளைப் புகுத்தி...தன் வசனங்களாலும், நடிகர்களின் நடிப்பினாலும் வெற்றியை அடைந்த படமாகும் பூம்புகார்

இப்படத்தில் சமணத்துறவி கவுந்தியடிகளாக கே பி சுந்தராம்பாள் நடித்திருந்தார்.ஆனால் அவரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்க பெரு முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டத்து

அவர் ஒரு முருக பக்தர்.எப்போதும், நெற்றியில் வீபூதிப்பட்டையுடன் இருப்பார்.ஆனால், சமணத்துறவி எப்படி விபூதி இடமுடியும்.ஆகவே அவர் இப்பாத்திரத்தில் நடிக்க மறுத்தார்.கடைசியில், கலைஞரே சென்று, அவரை சமாதானப்படுத்தி, நெற்றியில் ஒரு கோடாக நாமத்தைப் போட்டு நடிக்க வைத்தார்.

மீண்டும், அவர் பாடும் போது ஒரு பிரச்னை ஏற்பட்டது..பாடலாசிரியர் எழுதிய பாடல் வரிகள்..

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

இறைவனை கேலி செய்வது போல வரும் இவ்வரிகளை தான் பாட மாட்டேன் என்று விட்டார் கேபிஎஸ்.,கடைசியில் அவ்வரிகள்..

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது"

என்று மாற்றிய பின்னரே..அவர் அப்பாடலைப் பாடினார்

மதுரையை கண்ணகி தீயிட்டுக் கொளுத்தியதாக கதை.ஆனால் கலைஞரோ..மதுரை பூகம்பம் ஏற்பட்டு அழிவது போல மாற்றினார்

பொற்கொல்லர்கள் மனம் நோகாதவாறு வசனங்கள் எழுதப்பட்டன

காலத்திற்கேற்ப மாற்றங்களில் செயல்பட்டு வந்ததாலேயே கலைஞரால் கலை, இலக்கியம், மேடைப் பேச்சு,எழுத்து நடை,ஆகியவற்றில் வெற்றி நடை போட முடிந்தது.

இப்படத்தின் ஆரம்பம்..கலைஞரே வந்து..கதைச்சுருக்கத்தை சொல்வது போல அமைந்தது சிறப்பாகும்.சிலப்பதிகாரம், உருவான வரலாற்றையும், பூம்புகாரின் பழங்கால சிறப்பையும் கூறி படத்தை துவக்கி வைப்பார்.

ஆர்.சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்புடன் அமைந்தன.
கலைஞர் எழுத கே பி சுந்தராம்பாள் பாடிய வாழ்க்கை என்னும் ஓடம் இன்றும் பலர் முணுமுணுக்கும் பாடலாகும்( வருமுன் காப்பவன் அறிவாளி, துயர் வந்தபின் தவிப்பவனோ ஏமாளி)

எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி இருவரின் வசன உச்சரிப்பும், கலைஞரின் வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.நெடுஞ்செழியன் அரசபையில் கண்ணகி நீதி கேட்டு சிலம்பை வீசும் காட்சி வசனங்களும் பராசக்தி வசனம் போல பாராட்டுப் பெற்றவையாகும்

இப்படத்தில் கலைஞரின் வசனத்தில் ஒரு துளி

மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது  

No comments:

Post a Comment