Thursday, December 29, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 29



குலக்கொழுந்து - 36

1981ல் வந்த திரைப்படம் குலக்கொழுந்து.தயாரிப்பு ஏ வி ஆர் பிகசர்ஸ்.டி ஆர் ராமண்ணா இயக்கம்.ஜெயஷங்கர், ஸ்ரீபிரியா நடித்தனர் எம் எஸ் விஸ்வநாதன் இசை

மாடி வீட்டு ஏழை - 37

சிவாஜி, ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.பூம்புகார் புரடக்சன்ஸ் தயாரித்த இப்படத்திற்கான திரைக்கதை, வசனம் கலைஞர்

தூக்குமேடை - 38

அப்பன் ஃபில்ம்ஸ் தயாரித்து அமிர்தம் இயக்கத்தில் கலைஞர் கதை வசனத்தில் 1982ல் வந்த படம் தூக்கு மேடை.இதில் சந்திரசேகர், மேனகா நடித்தனர்
இது முன்னர் கலைஞர் (பிறகு எம் ஆர் ராதா) நடிக்க மேடை நாடகமாகப் போடப்பட்டது.இந்நாடகம் பார்த்த ராதா கருணாநிதிக்கு "கலைஞர்" என்ற பட்டத்தைக் கொடுத்தார்

Tuesday, December 27, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 28


வண்டிக்காரன் மகன் - 33

மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்க்ஷன்ஸ் சார்பில் வந்த படம் வண்டிக்காரன் மகன்

அண்ணாவின் கதைக்கு கலைஞர் கதை வசனம் ஜெயசித்ரா ஜெயசங்கர் நடிக்க அமிர்தம் இயக்கினார்.

இசை எம் எஸ் விஸ்வநாதன்


நெஞ்சுக்கு  நீதி - 34

கலைஞர் திரைக்கதை, வசனத்தில் , ஜெயசங்கர், சங்கீதா நடிக்க வந்த இப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு

ஷங்கர்- கணேஷ் இசை


ஆடுபாம்பே - 35

பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் அமிர்தம் இயக்க ஜெயசங்கர் நடிப்பில் வந்த படம் ஆடுபாம்பே

மூடத்தனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் கலைஞர்

இயக்கம் அமிர்தம்

Sunday, December 25, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 27



பூக்காரி . அணையா விளக்கு- 31- 32

டி என் பாலு  கதை, வசனம் எழுத பூக்காரி என்ற படம் மு க முத்து நடிக்க வெளிவந்தது.அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்

பின்னர் கலைஞர் கதை எழுத மு க முத்து நடித்த அணையாவிளக்கு படம்  அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் வந்தது.கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசையில், முத்து. பி சுசீலா பாடிய மோகம் அது முப்பது நாள் பாடல் ஹிட்


பின், மு க முத்து நடிக்க வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்பார்த்த அலவிற்கு சோபிக்கவில்லை