Tuesday, January 10, 2017

கலைஞர் எனும் கலைஞன் - 31



காகித ஓடம் - 43

பூம்புஹார் பிகசர்ஸ் தயாரிப்பில். இராம நாராயணன் இயக்கத்தில் வந்த படம் "காகித ஓடம்".படம் வெளியான ஆண்டு 1986

பாலைவன ரோஜாக்கள்-44

கலைஞர் திரைக்கதை, வசனத்தில், பூம்புகார் பிக்சர்ஸ் தயாரிக்க

 மணிவண்ணன் இயக்கத்தில் வந்த படம் "பாலைவன ரோஜாக்கள்" பிரபு,  சத்தியராஜ், நளினி, லட்சுமி நடித்திருந்தனர்.இசை இளையராஜா.1986ல் இப்படம் வெளியானது

நீதிக்கு தண்டனை- 45

1987ல் வெளியான படம் நீதிக்கு தண்டனை.கலைஞர் திரைக்கதை, வசனத்தில் எஸ் ஏ சந்திர  சேகர் இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை.நிழல்கள் ரவி, ராதிகா நடித்திருந்தனர்.நியாயனி ஷிக்க்ஷா என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கம்.இப்படத்தில் ஷோபா சந்திர சேகர் பாடிய இருபாடல்கள் "சின்னஞ்சிறு கிளியே" (slow motion)  நீதானே மகாராணி பாடலும், சின்னக்ண்சிறு கிளியே என்ற பாடலே ஜேசுதாஸ், சுவர்ணலதா பாட ஹிட்

ஒரே ரத்தம் -46

1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக் நடிக்க கே சொர்ணம் இயக்கம்.இசை தேவேந்திரன்

வீரன் வேலுத்தம்பி - 47

1987 வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் கதை வசனம்.இராம நாராயணன் இயக்கம்.இசை எஸ் ஏ ராஜ்குமார்.ராதாரவி, விஜய் காந்த் நடிப்பு.அநீதியை எதிர்த்து போராடும் கதை.ஆரம்பத்தில் கோர்ட் சீன் இப்படத்திலும் உண்டு.ராதாரவி..கலைஞரின் கூரிய வசனங்களைப் பேசுவார்.

Monday, January 2, 2017

கலைஞர் எனும் கலைஞன் -30



1983ல் வந்த படம்.எது எங்க நாடு 39

சுரேஷ், சுலக்சணா நடிக்க இராம நாராயணன் இயக்கம்.பூம்புஹார் தாரிப்பு

திருட்டு ராஜாக்கள் -40

1984ல் பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க இராம நாராயணன் இயக்கத்தி வந்த படம் "திருட்டு ராஜாக்கள்'.இசை ஷங்கர் கணேஷ்

காவல் கைதிகள் - 41

பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் ராதாரவி நடிக்க இராம் நாராயணன் இயக்கத்தில் வந்த படம் காவல் கைதிகள்.இசை ஷங்கர் கணேஷ்

குற்றவாளி - 42

1985ல் பூம்புகார் தயாரிப்பில் வந்த படம் குற்றவாளி.ரவீந்தர், விஜி நடிக்க இயக்கம் இராம நாராயணன்

Thursday, December 29, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 29



குலக்கொழுந்து - 36

1981ல் வந்த திரைப்படம் குலக்கொழுந்து.தயாரிப்பு ஏ வி ஆர் பிகசர்ஸ்.டி ஆர் ராமண்ணா இயக்கம்.ஜெயஷங்கர், ஸ்ரீபிரியா நடித்தனர் எம் எஸ் விஸ்வநாதன் இசை

மாடி வீட்டு ஏழை - 37

சிவாஜி, ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.பூம்புகார் புரடக்சன்ஸ் தயாரித்த இப்படத்திற்கான திரைக்கதை, வசனம் கலைஞர்

தூக்குமேடை - 38

அப்பன் ஃபில்ம்ஸ் தயாரித்து அமிர்தம் இயக்கத்தில் கலைஞர் கதை வசனத்தில் 1982ல் வந்த படம் தூக்கு மேடை.இதில் சந்திரசேகர், மேனகா நடித்தனர்
இது முன்னர் கலைஞர் (பிறகு எம் ஆர் ராதா) நடிக்க மேடை நாடகமாகப் போடப்பட்டது.இந்நாடகம் பார்த்த ராதா கருணாநிதிக்கு "கலைஞர்" என்ற பட்டத்தைக் கொடுத்தார்

Tuesday, December 27, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 28


வண்டிக்காரன் மகன் - 33

மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்க்ஷன்ஸ் சார்பில் வந்த படம் வண்டிக்காரன் மகன்

அண்ணாவின் கதைக்கு கலைஞர் கதை வசனம் ஜெயசித்ரா ஜெயசங்கர் நடிக்க அமிர்தம் இயக்கினார்.

இசை எம் எஸ் விஸ்வநாதன்


நெஞ்சுக்கு  நீதி - 34

கலைஞர் திரைக்கதை, வசனத்தில் , ஜெயசங்கர், சங்கீதா நடிக்க வந்த இப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு

ஷங்கர்- கணேஷ் இசை


ஆடுபாம்பே - 35

பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் அமிர்தம் இயக்க ஜெயசங்கர் நடிப்பில் வந்த படம் ஆடுபாம்பே

மூடத்தனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் கலைஞர்

இயக்கம் அமிர்தம்

Sunday, December 25, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 27



பூக்காரி . அணையா விளக்கு- 31- 32

டி என் பாலு  கதை, வசனம் எழுத பூக்காரி என்ற படம் மு க முத்து நடிக்க வெளிவந்தது.அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்

பின்னர் கலைஞர் கதை எழுத மு க முத்து நடித்த அணையாவிளக்கு படம்  அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் வந்தது.கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசையில், முத்து. பி சுசீலா பாடிய மோகம் அது முப்பது நாள் பாடல் ஹிட்


பின், மு க முத்து நடிக்க வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்பார்த்த அலவிற்கு சோபிக்கவில்லை 

Wednesday, November 30, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 26


பிள்ளையோ பிள்ளை - 30

1970ல் எங்கள் தங்கம் வெளிவந்த பின்னர், சிறிது சிறிதாய் எம் ஜி ஆர்., கருணாநிதி இடையே உறவில் சிறிய சிறிய விரிசல்கள் ஏற்படலாயிற்று.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் சார்பில், முரசொலி மாறன் எடுத்த "எங்கள் தங்கம்" படத்திற்குப் பின், இனி படங்களே தயாரிக்கப் போவதில்லை என்று மாறன் சலிப்புடன் கூறினார்

1972ல் எம் ஜி ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு க முத்துவை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர்.முத்துவும் எம் ஜி ஆர் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார்.சொந்தக் குரலிலும் பாடினார்

1972ல் அவர் நடித்து கலைஞர் கதை, வசனத்தில் அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வந்த படம் பிள்ளையோ பிள்ளை.

கலைத்தாயின் பொன்மகுடத்தில் புது முத்து, கலைஞரின் செல்வன் முத்து நடிக்கும் கலைஞரின் கருத்தோவியம் என டைடிலில் காட்டப்பட்டது

"உயர்ந்த இடத்தில் பிறந்தவன் நான்...ஓய்வு இல்லாமல் உழைப்பவன் நான்..துயர் வந்தாலும் தீர்ப்பவன் நான்..தொடர்ந்து முன்னேறத் துடிப்பவன் நான்" என டி எம் சௌந்தரராஜன் பாட, எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க அறிமுகமானார் முத்து.

கங்காதரன் ஒரு சமுக விரோதி.சிலை கடத்துபவன்.அவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு அந்தப் பழியை தன் வேலைக்காரன் முருகன் மீது போட்டு அவனை சிறைக்கு அனுப்புகிறான்.முருகன் சிறையிலிருந்து தப்பி, கங்காதரன் மகனை கடத்திவிடுகிறான்.இதனிடையே கங்காதரன், காஞ்சனா என்ற பெண்ணை மணக்கிறான்.அவளையும் முருகன் கடத்த, அவள் கருவுற்று இருப்பதை அறிந்தவன் அவளை விடுவிக்கிறான்.அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்கிறது.

முருகன் வளர்க்கும் மகன் குமார் ஒரு மருத்துவர் ஆகிறான்.கங்காதரனுக்கு பிறந்த அடுத்த மகன் கண்ணன், ஒரு நேர்மையானவனாகவும், கடின உழைப்பாளியும் ஆகிறான்.

இதனிடையே, அரசு வழக்கறிஞர் ஒருவரின் மகள் அவர்களில் ஒருவனுடன் காதல் வயப்படுகிறாள்.கண்ணனும், குமாரும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

அது எப்படி முடிகிறது.கங்காதரன் என்ன ஆனான்.அவனுக்கு குமார் தன் மகன் எனத் தெரிந்ததா என்பதே மீதிக் கதையாகும்

கண்ணனாகவும், குமாராகவும், முத்து தன் முதல் படத்திலேயே இரு வேடங்களில் நடித்தார்.

தவிர்த்து, கங்காதரனாக ஆர் எஸ் மனோகர், காஞ்சனாவாக விஜயகுமாரி, முருகனாக எம் ஆர் ஆர் வாசு நடித்தனர்.லட்சுமி கதாநாயகியாக நடித்தார்

உபரி தகவல்
----------------------

இப்படத்தில் வாலி எழுதிய "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ" என்ற பாடலும் உண்டு.ஒருநாள் எம் ஜி ஆர்., வாலியுடன் காலை உணவு அருந்தியபடியே,"வாலி நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா" மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு வருத்தப்பட்டாராம்.வாலி கூறிய, அதற்குரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம் 

Sunday, November 27, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 25


எங்கள் தங்கம்  - 29

படம் வெளியான நாள் 9-10-1970

கலைஞர் முதல்வராக இருந்த சமயம்.

மேகலா பிக்சர்ஸ் சார்பில் வந்த படம்.கதை, வசனம், தயாரிப்பு முரசொலி மாறன்.இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.

டைடிலில், கலைஞரின்"எங்கள் தங்கம்" என்று வரும்.அந்த அளவே கலைஞருக்கும், இப்படத்திற்கும் தொடர்பு

தங்கம் ஒரு லாரிடிரைவர்.அவரது சகோதரி சுமதி.கண் பார்வை இல்லாதவர்.மூர்த்தி சுமதியின் கணவர்.மூர்த்தி, ஒரு சமூக விரோத கும்பலிடம் சிக்குகிறார்.அதற்கான காரணம், இரும்பு பெட்டகத்தை உடைக்கும் திறமை வாய்ந்தவர் அவர் என்பதால்.

தங்கம், எப்படியாவது, மூர்த்தியை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்.அவருக்கு உதவியாக கலாதேவி இருக்கிறார்.

தங்கமாக...தங்கம் எம் ஜி ஆர்., மூர்த்தியாக ஏ விஎம் ராஜன், சுமதியாக புஷ்பலதா, கலாதேவியாக ஜெயலலிதா நடித்தனர்

இப்படத்தில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பியதை நகைச்சுவையாக சொல்வதுபோல எம் ஜி ஆர் கதாகாலட்சேபம் செய்வது ரசிக்கத்தக்கது

தவிர்த்து, எம் எஸ் விஸ்வநாதன் இசையில், நான் அளவோடு ரசிப்பவன் (சௌந்தரராஜன் ,சுசீலா), தங்கப்பதக்கத்தின் மேலே (டி எம் எஸ்., சௌந்தரராஜன்) பாடல்கள் ஹிட்.கதாகாலட்சேபம் டி எம் எஸ் குரல்.

பட ஆரம்பத்தில், சிறு சேமிப்புப் பற்றி ஒரு கூட்டம் நடைபெறும்.அதில் எம் ஜி ஆர்., எம் ஜியாராகாவே கலந்துகொண்டு, சிறு சேமிப்பு குறித்து பேசுவார்.

படம் வெற்றி படமாக அமைந்தது.