Wednesday, November 30, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 26


பிள்ளையோ பிள்ளை - 30

1970ல் எங்கள் தங்கம் வெளிவந்த பின்னர், சிறிது சிறிதாய் எம் ஜி ஆர்., கருணாநிதி இடையே உறவில் சிறிய சிறிய விரிசல்கள் ஏற்படலாயிற்று.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் சார்பில், முரசொலி மாறன் எடுத்த "எங்கள் தங்கம்" படத்திற்குப் பின், இனி படங்களே தயாரிக்கப் போவதில்லை என்று மாறன் சலிப்புடன் கூறினார்

1972ல் எம் ஜி ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு க முத்துவை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர்.முத்துவும் எம் ஜி ஆர் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார்.சொந்தக் குரலிலும் பாடினார்

1972ல் அவர் நடித்து கலைஞர் கதை, வசனத்தில் அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வந்த படம் பிள்ளையோ பிள்ளை.

கலைத்தாயின் பொன்மகுடத்தில் புது முத்து, கலைஞரின் செல்வன் முத்து நடிக்கும் கலைஞரின் கருத்தோவியம் என டைடிலில் காட்டப்பட்டது

"உயர்ந்த இடத்தில் பிறந்தவன் நான்...ஓய்வு இல்லாமல் உழைப்பவன் நான்..துயர் வந்தாலும் தீர்ப்பவன் நான்..தொடர்ந்து முன்னேறத் துடிப்பவன் நான்" என டி எம் சௌந்தரராஜன் பாட, எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க அறிமுகமானார் முத்து.

கங்காதரன் ஒரு சமுக விரோதி.சிலை கடத்துபவன்.அவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு அந்தப் பழியை தன் வேலைக்காரன் முருகன் மீது போட்டு அவனை சிறைக்கு அனுப்புகிறான்.முருகன் சிறையிலிருந்து தப்பி, கங்காதரன் மகனை கடத்திவிடுகிறான்.இதனிடையே கங்காதரன், காஞ்சனா என்ற பெண்ணை மணக்கிறான்.அவளையும் முருகன் கடத்த, அவள் கருவுற்று இருப்பதை அறிந்தவன் அவளை விடுவிக்கிறான்.அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்கிறது.

முருகன் வளர்க்கும் மகன் குமார் ஒரு மருத்துவர் ஆகிறான்.கங்காதரனுக்கு பிறந்த அடுத்த மகன் கண்ணன், ஒரு நேர்மையானவனாகவும், கடின உழைப்பாளியும் ஆகிறான்.

இதனிடையே, அரசு வழக்கறிஞர் ஒருவரின் மகள் அவர்களில் ஒருவனுடன் காதல் வயப்படுகிறாள்.கண்ணனும், குமாரும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

அது எப்படி முடிகிறது.கங்காதரன் என்ன ஆனான்.அவனுக்கு குமார் தன் மகன் எனத் தெரிந்ததா என்பதே மீதிக் கதையாகும்

கண்ணனாகவும், குமாராகவும், முத்து தன் முதல் படத்திலேயே இரு வேடங்களில் நடித்தார்.

தவிர்த்து, கங்காதரனாக ஆர் எஸ் மனோகர், காஞ்சனாவாக விஜயகுமாரி, முருகனாக எம் ஆர் ஆர் வாசு நடித்தனர்.லட்சுமி கதாநாயகியாக நடித்தார்

உபரி தகவல்
----------------------

இப்படத்தில் வாலி எழுதிய "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ" என்ற பாடலும் உண்டு.ஒருநாள் எம் ஜி ஆர்., வாலியுடன் காலை உணவு அருந்தியபடியே,"வாலி நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா" மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு வருத்தப்பட்டாராம்.வாலி கூறிய, அதற்குரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம் 

Sunday, November 27, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 25


எங்கள் தங்கம்  - 29

படம் வெளியான நாள் 9-10-1970

கலைஞர் முதல்வராக இருந்த சமயம்.

மேகலா பிக்சர்ஸ் சார்பில் வந்த படம்.கதை, வசனம், தயாரிப்பு முரசொலி மாறன்.இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.

டைடிலில், கலைஞரின்"எங்கள் தங்கம்" என்று வரும்.அந்த அளவே கலைஞருக்கும், இப்படத்திற்கும் தொடர்பு

தங்கம் ஒரு லாரிடிரைவர்.அவரது சகோதரி சுமதி.கண் பார்வை இல்லாதவர்.மூர்த்தி சுமதியின் கணவர்.மூர்த்தி, ஒரு சமூக விரோத கும்பலிடம் சிக்குகிறார்.அதற்கான காரணம், இரும்பு பெட்டகத்தை உடைக்கும் திறமை வாய்ந்தவர் அவர் என்பதால்.

தங்கம், எப்படியாவது, மூர்த்தியை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்.அவருக்கு உதவியாக கலாதேவி இருக்கிறார்.

தங்கமாக...தங்கம் எம் ஜி ஆர்., மூர்த்தியாக ஏ விஎம் ராஜன், சுமதியாக புஷ்பலதா, கலாதேவியாக ஜெயலலிதா நடித்தனர்

இப்படத்தில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பியதை நகைச்சுவையாக சொல்வதுபோல எம் ஜி ஆர் கதாகாலட்சேபம் செய்வது ரசிக்கத்தக்கது

தவிர்த்து, எம் எஸ் விஸ்வநாதன் இசையில், நான் அளவோடு ரசிப்பவன் (சௌந்தரராஜன் ,சுசீலா), தங்கப்பதக்கத்தின் மேலே (டி எம் எஸ்., சௌந்தரராஜன்) பாடல்கள் ஹிட்.கதாகாலட்சேபம் டி எம் எஸ் குரல்.

பட ஆரம்பத்தில், சிறு சேமிப்புப் பற்றி ஒரு கூட்டம் நடைபெறும்.அதில் எம் ஜி ஆர்., எம் ஜியாராகாவே கலந்துகொண்டு, சிறு சேமிப்பு குறித்து பேசுவார்.

படம் வெற்றி படமாக அமைந்தது. 

Friday, November 25, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 24




வாலிப விருந்து -28

மேகலா பிக்சர்ஸ் சார்பில் 1967ல் வந்த படம் வாலிப விருந்து

அண்ணாவின் கதைக்கு, கலைஞர் வசனம்.இயக்கம் முரசொலி மாறன்

ரவிச்சந்திரன் , பாரதி, சந்திர பாபு ஆகியோர் நடித்திருந்தனர்

ரவிச்சந்திரன்  ஒரு வேலையில்லாத இளைஞர்.பக்கத்து வீட்டில் இருப்பவர் பாரதி.இருவருக்கும் எப்போதும் சண்டை, சச்சரவு,பாரதியின் தந்தை பாலையா, தன் சொத்தில் ஒரு பகுதியை தர்ம ஸ்தாபனத்திற்கு செலவிடுவதைத் தடுக்க நினைக்கிறார் அவர் உறவுப்பையன் அசோகன்.தவிர்த்து, பாரதியை மணந்து அனைத்து சொத்துக்களையும் அடைய நினைக்கிறார்.அதனால் பாலையாவை  கடத்தி, பாலையா போல இருக்கும் வேறு ஒருவரை வீட்டிற்குள் வர வழைக்கிறார்.இது பாரதிக்குத் தெரியாது.ஆனால், அசோகனின் இந்த சதிசெயல்களை அறிந்த ரவிச்சந்திரன் உண்மையை வெளிக்கொணர்வதுடன்பாரதியையும் மணக்கிறார்.பாலையாவிற்கு இரட்டை வேடம்

ஆர்.சுதர்சனம் இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாடிய <அவன் காதலித்தான்..அவள் ஆதரித்தாள்" பாடலும், டி எம் சௌந்தரராஜன் பாடிய எங்கே என் மனம், வாலிப விருந்து ஆகிய பாடல்களும் ஹிட்

தவிர்த்து, சந்திரபாபு பாடிய, "ஒன்றைக்கண்ணும் டோரியா" அனைவரும் ரசிக்கும் பாடலாக அமைந்தது எனலாம் 

கலைஞர் எனும் கலைஞன் - 23



தங்கத் தம்பி - 27

உமையாள் புரடக்சன்ஸ் சார்பில் இப்படம் வெளிவந்த நாள் 26-1-1967

ரவிசந்திரன், சுந்தரராஜன், வாணிஸ்ரீ, பாரதி நடித்த இப்படத்திற்கு திரைக்கதை ,வசனம் கலைஞர்

இரு அன்பான சகோதரர்கள் வரதன் (சுந்தரராஜன்), வேணு (ரவிச்சந்திரன்)
வரதனின் மனைவி (வாணிஸ்ரீ)க்கு பிள்ளைப் பிறப்பின் மீது பயம்.அதனால் குழ்ந்தைப் பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.இதனிடையே, வேணுவிற்கு, ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்க அண்ணன் நினைக்கையில், இவரோ..அவன் ஒரு ஏழைப் பெண்ணை மணக்க வேண்டும் என நினைத்து, பாரதியை மணமுடிக்கிறார்.

இப்போது, இருவருக்குமே குழந்தை பிறக்க, பாரதியே வாணிஸ்ரீயின் குழ்ந்தையையும் வளர்க்கிறார்.

ஒருகட்டத்தில் மனம் மாறி தன் தவறை உணர்கிறார் வாணிஸ்ரீ.

கே வி மகாதேவன் இசையில், பி சுசீலா பாடிய "ஆளுக்கொரு முத்தம் உங்கம்மா கன்னத்திலே" என்ற பாடல் சூபர் ஹிட்.

கலைஞர் எனும் கலைஞன் - 22



மணிமகுடம் - 26

1958ஆம் ஆண்டு கலைஞர் எழுதிய நாடகம் மணிமகுடம்

1966ஆம் ஆண்டு கலைஞரின் கதை வசனத்தில், எஸ் எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது.

எஸ் எஸ் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு.

எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெயலலிதா, விஜயகுமாரி, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்

கொடுங்கோல் மன்னன் மணிமாறன் என்பவனை அழித்து வெற்றி கண்ட கதை.ஆங்காங்கே சில அரசியல் நெடி வசனங்கள்

இந்த படத்தில் நடித்ததன் மூலம், கலைஞரின் வசனத்தைப் பேசியதன் மூலம், தான் வசனங்களைத் தெளிவாகப் பேசக் கற்றுக் கொண்டதாக ஜெயலலிதா கூறியதாக ஒரு பேட்டியில் எஸ் எஸ் ஆர். கூறியுள்ளார்

ஆர்.சுதர்சனம் இசையில் நான் கடந்து வந்த பாதை என்ற பாடலும், ஆதவன் உதித்தான் மலை மேலே என்ற பாடலும் சிறப்பு 

Thursday, November 24, 2016

கலைஞர்

திரைப்பட வசனகர்த்தா, காதாசிரியர்,பாடலாசிரியர், படத்தயாருப்பாளர்,நாடக நடிகர்,இலக்கியவாதி,அரசியல்வாதி, பத்திரிகையாளர், மனித நேயம் மிக்கவர்..அப்பப்பா...இவருக்குத்தான் எத்தனை முகங்கள்

எதற்கெடுத்தாலும் நேரமில்லை என சோம்பித்திரியும் பலரை நாம் அறிவோம்.இயற்கை அவர்களுக்கு அளித்துள்ள ஒரு நாளுக்கான இருபத்தி நான் கு மணி நேரத்தைத்தான் கலைஞருக்கும் வழ்னகி இருக்கிறது.ஆனால், அதை வைத்துக் கொண்டு அவர் வாழ்நாளில் அவர் சாதித்துவரும் சாதனைகள்...இதை எண்ணும்போது பிரமிப்பாய்த்தான் இருக்கிறது

நாகப்பட்டிணம் மாவட்டம், திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் முத்துவேல், அஞ்சுகம் தம்பதியருக்கு பிறந்தது ஒரு ஆண் மகவு.அக்குழ்ந்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர் இடப்பட்டது.அக்குழ்ந்தையே பின்னாளில் பல சாதனைகள் புரிந்த கலைஞர் கருணாநிதி ஆவார்.

1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படம் மூலம் அவரது திரையுலக பிரவேசம் நடந்திருந்தாலும், அவரது எழுத்தாற்றல் 14 வயதிலேயே கையெழுத்துப் பிரதி பத்திரிகை நடத்தும் அளவிற்கு இருந்தது

அவரது வயது ஏற ஏற..எழுத்தாற்றலும் வளர்ந்தது.பகுத்தறிவு, திராவிடம் ஆகிய கருத்துகளின் அடிப்படையில் கதைகள், கட்டுரைகள், அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு முதலிய பத்திரிகைகளில் வந்தன

நாடகத் துறையிலும் அவரது பேனா சென்றது.பழநியப்பன் என்ற நாடகத்தில் ஆரம்பித்து தூக்கு மேடை,மணிமகுடம்,விமலா அல்லது விதவையின் கண்ணீர்,அம்மையப்பன், வாழமுடியாதவர்கள் என அவர் எழுதிய நாடகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்

தூக்குமேடை நாடகத்திற்கு வந்த எம் ஆர் ராதா, கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டமளித்து பாராட்டினார்.

அதுவே அவரது பெயராகக் குறிப்பிட ஆரம்பித்துவிட்டது எனலாம்
தமிழ்த் திரைப்ப்ட உலகில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய அவரின் எழுத்துக்கள், வீரம்,காதல்,சோகம், நையாண்டி,தத்துவம் என அணைத்து பரிமாணங்களிலும் விளையாடியது,தன் திரைப்பணி மூல்மாக சமுக மாற்றத்தை ஏற்படுத்தியவர் எனலாம்

வெறும் கதை, வசனகர்த்தாவாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராக மேகலா பிக்சர்ஸ்,அஞ்சுகம் பிக்சர்ஸ்,கலையெழில் கம்பைன்ஸ்,பூம்புகார் புரடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலமாக 29 படங்களை கலைஞர் தயாரித்துள்ளார்.

60 ஆண்டுகளில் 75 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்பட ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவர் இவர்.

நூற்றாண்டு கண்ட திரையுலகில் 70ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர்.வெள்ளித்திரை மட்டுமின்றி, சின்னத்திரையிலும், ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், தென் பாண்டி சிங்கம் என சாதனை புரியும் சாதனையாளர்

திரையுலகின் தாதா சாகேப் பால்கே விருது, இந்த மாமனிதருக்கு இன்னமும் வழ்ங்கப்படாதது துரதிருஷ்டமே.

திரையுலகின் மூத்த பெருமகனான இவருக்கு அந்த விருது கிடைத்திட...இப்பதிவைக் காணும் அனைவரும் ஷேர் செய்யவும்.திரையுலகைச் சேர்ந்தவர்கள்..சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்லவும்.

முடிந்தால்..கலைஞர் பாணியிலேயே மைய அரசுக்கு கடிதங்களையும் எழுதலாம் ஆயிரக்கணக்கில்  

கலைஞர் எனும் கலைஞன் - 21



மறக்கமுடியுமா - 25


கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த படம் மறக்க முடியுமா?

இப்படத்தின், திரைக்கதை, வசனம் கலைஞருடையது.படத்தயாரிப்பாளர், இயக்கம், முரசொலி மாறன் ஆவார்

அரும்பு முதல் கருகிய மலராகும் வரை அல்லல்பட்டு அழிகின்ற பென் ஒருத்தியின் கண்ணீரால் தீட்டப்பட்டதே இந்த சித்திரம்என்றார் கலைஞர்

ஒரு சகோதரி, இரு சகோதரர்கள் சிறு வயதிலேயே அனாதை ஆகின்றனர்
விதி வசத்தால் அவர்கள் பிரிய நேரிடுகிறது.அந்தப் பெண் வளர்கிறாள்.அவள் வாழ்வில், அடி மேல் அடி.

ஒரு கட்டத்தில், வேறு ஒரு வீட்டில் வசிக்கும் அவளது சகோதரன் குடிபோதையில், அவள் தன் சகோதரி எனத் தெரியாமல் அணுகுகிறான்.
அவளுக்கோ அவன் சகோதரன் எனத் தெரியும்..அதைஉ அவனுக்கு அவள் எப்படி புரிய வைக்கிறாள்?

இது போன்ற பல உணர்ச்சிகரமான காட்சிகளூம், வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.

டி கே ராமமூர்த்தி இசையில், கலைஞர் எழுதி பி சுசீலா பாடியிருந்த "காகித ஓடம்..கடல் அலைமேலே போவது போல மூவரும் போவோம்' என்ற பாடல் இன்றும் காதுகளில் தேனாக ஒலிக்கிறது

தவிர்த்து, ஜேசுதாஸ், சுசீலா பாடிய , சுரதா எழுதிய "வசந்த காலம் வருமோ" பாடலும் சிறப்பு

உபரி தகவல்_

படத்திற்கு முக்கியப் பாடல் தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.மாயவநாதன் எழுதியது இசையமைப்பாளர் ராமமூர்த்திக்கு திருப்தியை அளிக்கவில்லை."இங்களுக்கு எப்படித்தான் வேண்டும்?" என மாயவ நாதன் கேட்க, கோபத்தில் இருந்த ராமமூர்த்தி.."மாயவநாதா...மாயவநாதா...மாயவநாதா.. என்று எழுது" என்றாராம்

இதனால் மாயவநாதன் கோபித்துக் கொண்டு போய்விட, விஷயம் அறிந்த கலைஞர் அதேபோல தானே ஒரு பாடலை எழுதினாராம் அந்த பாடலே "காகித ஓடம் பாடல்"

(மூலக்கதை  தெலுங்கு.ஏற்கனவே சந்தானம் என்ற பெயரில் மொழிமாற்று படமாய் வெளிவந்தது)

Saturday, November 5, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 20 அவன் பித்தனா

அவன் பித்தனா - 25
-------------------------------------



1966ல் வந்த படம் அவன் பித்தனா...வெளிவந்த நாள் 29-4-1966

எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி நடிக்க ப.நீலகண்டன் இயக்கத்தில் உமையாள் புரடக்சன்ஸ் தயாரிப்பில் வந்த படம்

கலைஞர் திரைக்கதை, வசனம்

அவன் பைத்தியக்காரனா என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகமே அவன் பித்தனா என வெள்ளித்திரைக் காவியமானது

பெரிய தொழிலதிபர் நல்லையா ராஜா.ஏழைப் பெண் ஓருத்தியைக் காதலிக்கும் தன் மகனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார்.மகனோ, அந்தப் பெண்ணை மணந்து, அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்து விட்டு இறக்கின்றான்.அதன் பின்னர் அப்பெண்ணும் நீண்ட நாட்கள் வாழவில்லை

குமார் எனப் பெயரிடப்பட்ட மகனை, ஒரு டீக்கடைக்காரர் பார்த்து, வளர்த்து பெரியவன் ஆக்குகிறார்

ஒருநாள், கோமதி என்ற பெண், தன்னை சிலர் துரத்தி வருவதாக,  ஓடி வந்து டீக்கடையில் தஞ்சமடைகிறாள்.அப்பெண்ணை, உடல்நலமில்லாத நல்லையாவின் வீட்டிற்கு நர்ஸாக அனுப்புகிறான் மகன்.(அவர் தனது தாத்தா என அறியாமல்)கோமதி நல்லையாவின் அன்பிற்கு பாத்திரமாகிறாள்

பின்னர், நல்லையா இறக்க, அவர் சொத்துக்கு சொந்தம் கொண்டாடி பாலையா, நாகேஷ் ஆகியோர் வருகின்றனர்

கடைசியில் டீக்கடை குமார்தான் வாரிசு எனத் தெரிய வருகிறது

பார்த்தசாரதி இசையில், இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கின்றான் என்ற பாடல் பிரசித்திப் பெற்றது

Friday, November 4, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 19 பூமாலை



பூமாலை - 24

1965ல் முரசொலி மாறன் தயாரிக்க மேகலா பிக்சர்ஸ் சார்பில் வந்த படம் பூமாலை.

ப நீலகண்டன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை, வசனம்

எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி,, ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்

விஜயகுமாரியும், எஸ் எஸ் ஆரும் தங்கள் தோழி/தோழன் திருமணத்திற்கு வருகிறார்கள்.ஆனால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாதவர்கள்.
திருமண நிகழ்ச்சியில் நடனப் பெண் ராஜஸ்ரீ "கன்னம் கன்னம் சந்தனக் கிண்ணம்" என்று பாட்டுப் பாடி நடனமாடுகின்றார்.

இரவு, விஜயகுமாரியும், ராஜஸ்ரீயும்  தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகள் மாறிவிடுகின்றன.இது அரியாத எஸ் எஸ் ஆர் குடிபோதையில் நடனப் பெண்மணி அறைக்குப் போவதாக நினைத்து விஜயகுமாரி அறைக்குச் சென்று அவரை கற்பழித்துவிடுகிறார்.

இதனால் விஜயகுமாரி கர்ப்பம் அடைய...கடைசியில் தன் தவறு உணர்ந்து எஸ் எஸ் ஆர் அவரை மணக்கிறார்.

விஜகுமாரியின் பெயர் இப்படத்தில் பூமாலை ஆகும்

பூம்புகார் போலவே இப்படத்திலும் கலைஞர் படம் ஆரம்பிக்கும் முன் தோன்றி படம் பற்றி பேசுவார்

ஆர்.சுதர்சனம் இசை.கன்னம் கன்னம் கலைஞர் எழுதிய பாடல் ஆகும்

Thursday, November 3, 2016

கலைஞர் எனும் கலைஞன் - 17 காஞ்சித் தலைவன்



காஞ்சித் தலைவன் - 22

வெளியான ஆண்டு 26-10-1963

எம் ஜி ராமசந்திரன்,எஸ் எஸ் ராஜேந்திரன்,பானுமதி, விஜயகுமாரி,எம் ஆர் ராதா, அசோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கலைஞர், முரசொலி மாறன், ஏ காசிலிங்கம் ஆகியோர் இணைந்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் வெளியான படம் இது.

காஞ்சித் தலைவன் என அண்ணாவைக் குறிப்பதாகக் கூறி, தணிக்கை அதிகாரிகளால் பல காட்சிகள் வெட்டப்பட்டு வந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வில்லை எனலாம்.

கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்பை கலைஞர் ஏற்றார்.இயக்கம் ஏ காசிலிங்கம்

நரசிம்ம பல்லவனாக எம் ஜி ஆர்., பரஞ்சோதியாக எஸ் எஸ் ஆர்., சோழ இளவரசியாக பானுமதி, புலிகேசியாக அசோகன் ஆகியோர் நடித்த்னர்.

கே வி மகாதேவன் இசை.

இப்படத்தில் ஏ எல் ராகவன், எல் ஆர் ஈஸ்வரி பாடிய நீர் மேல் நடக்கலாம் என்று தொடங்கும் பாடலை கலைஞர் எழுதினார்

ஆலங்குடி சோமு எழுதிய மயங்காத மனம் கூட மயங்கும் (பாடியவர் பானுமதி). ஒரு கொடியில் இரு மலர்கள் (பாடியவர் டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா) ஆகிய பாடல்கள் ஹிட்.

அண்ணன் தங்கை பாசத்திற்குச் சவாலான ஒரு பாடல் ...
' ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா...' பாடல் அது சமயம் அனைவரது மனத்தையும் உருக வைத்தது . தமையனின் தன்மானத்திற்கு களங்கம் வரக் கூ
டாது என்ற நிலையில் தங்கை .
கண்கவரும் சிலையே ! காஞ்சி தரும் கலையே ...!! பாடல் ஒரு அற்புத இனிமை

கலைஞர் எனும் கலைஞன் - 18 பூம்புகார்



பூம்புகார் - 23

1964ல் வந்த படம் பூம்புகார்

மேகலா பிக்சர்ஸ் சார்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில், கலைஞர் திரைக்கதை, வசனத்தில் வந்த படம் பூம்புகார்

ஏற்கனவே பி யூ சின்னப்பா, கண்ணாம்பா நடித்து கண்ணகி படம் வெளிவந்திருந்தாலும், கலைஞர்..தன் எண்ணத்திற்கேற்ப கதையில் சில புதுமைகளைப் புகுத்தி...தன் வசனங்களாலும், நடிகர்களின் நடிப்பினாலும் வெற்றியை அடைந்த படமாகும் பூம்புகார்

இப்படத்தில் சமணத்துறவி கவுந்தியடிகளாக கே பி சுந்தராம்பாள் நடித்திருந்தார்.ஆனால் அவரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்க பெரு முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டத்து

அவர் ஒரு முருக பக்தர்.எப்போதும், நெற்றியில் வீபூதிப்பட்டையுடன் இருப்பார்.ஆனால், சமணத்துறவி எப்படி விபூதி இடமுடியும்.ஆகவே அவர் இப்பாத்திரத்தில் நடிக்க மறுத்தார்.கடைசியில், கலைஞரே சென்று, அவரை சமாதானப்படுத்தி, நெற்றியில் ஒரு கோடாக நாமத்தைப் போட்டு நடிக்க வைத்தார்.

மீண்டும், அவர் பாடும் போது ஒரு பிரச்னை ஏற்பட்டது..பாடலாசிரியர் எழுதிய பாடல் வரிகள்..

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

இறைவனை கேலி செய்வது போல வரும் இவ்வரிகளை தான் பாட மாட்டேன் என்று விட்டார் கேபிஎஸ்.,கடைசியில் அவ்வரிகள்..

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது"

என்று மாற்றிய பின்னரே..அவர் அப்பாடலைப் பாடினார்

மதுரையை கண்ணகி தீயிட்டுக் கொளுத்தியதாக கதை.ஆனால் கலைஞரோ..மதுரை பூகம்பம் ஏற்பட்டு அழிவது போல மாற்றினார்

பொற்கொல்லர்கள் மனம் நோகாதவாறு வசனங்கள் எழுதப்பட்டன

காலத்திற்கேற்ப மாற்றங்களில் செயல்பட்டு வந்ததாலேயே கலைஞரால் கலை, இலக்கியம், மேடைப் பேச்சு,எழுத்து நடை,ஆகியவற்றில் வெற்றி நடை போட முடிந்தது.

இப்படத்தின் ஆரம்பம்..கலைஞரே வந்து..கதைச்சுருக்கத்தை சொல்வது போல அமைந்தது சிறப்பாகும்.சிலப்பதிகாரம், உருவான வரலாற்றையும், பூம்புகாரின் பழங்கால சிறப்பையும் கூறி படத்தை துவக்கி வைப்பார்.

ஆர்.சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்புடன் அமைந்தன.
கலைஞர் எழுத கே பி சுந்தராம்பாள் பாடிய வாழ்க்கை என்னும் ஓடம் இன்றும் பலர் முணுமுணுக்கும் பாடலாகும்( வருமுன் காப்பவன் அறிவாளி, துயர் வந்தபின் தவிப்பவனோ ஏமாளி)

எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி இருவரின் வசன உச்சரிப்பும், கலைஞரின் வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.நெடுஞ்செழியன் அரசபையில் கண்ணகி நீதி கேட்டு சிலம்பை வீசும் காட்சி வசனங்களும் பராசக்தி வசனம் போல பாராட்டுப் பெற்றவையாகும்

இப்படத்தில் கலைஞரின் வசனத்தில் ஒரு துளி

மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது